×

ஓமலூரில் வெங்காயம், பூண்டு விலை உயர்வு

ஓமலூர், அக்.17: ஓமலூர் சந்தையில் பெரிய வெங்காயம் மற்றும் பூண்L விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.சேலம் மாவட்டம் ஓமலூரில் வெங்காய விற்பனை மையம் உள்ளது. இந்த மையத்திற்கு மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து பெரிய வெங்காயம் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் 50 கிலோ எடை கொண்ட ஒரு சிப்பம் ₹2000க்கு விற்பனையானது. தற்போது, அதன் விலை உயர்ந்துள்ளது. ஒரு சிப்பம் ₹2500 வரையிலும் விற்பனையாகிறது. அதேபோல், சின்ன வெங்காயம்50 கிலோ சிப்பம் ₹1700க்கு விற்பனையாகிறது. வெங்காய விலை ஏற்றத்தின் காரணமான  சில்லரை விற்பனை கடைகளில் கடந்த வாரம் கிலோ ₹40க்கு விற்ற பெரிய வெங்காயம் தற்போது ₹50க்கு விற்பனையாகிறது. சின்ன வெங்காயம் கிலோ ₹35க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஓமலூர் வெங்காய சந்தையில் வரத்து குறைவாக இருந்தாலும் வெங்காயம் விற்பனை அதிகமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல், பூண்டு விலையும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. கடந்த மாதத்தில் கிலோ ₹150க்கு விற்ற பூண்டு தற்போது ₹250 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. போலி தட்டுப்பாடு காரணமாக பெரிய வெங்காயம், பூண்டு விலை உயர்ந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டு பதுக்கி வைத்துள்ள உணவு பொருட்களை விற்பனைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Omalur ,
× RELATED சேலம் மாவட்டம் ஓமலூரில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!