×

வாழப்பாடியில் வங்கி மேலாளர் மீது பரபரப்பு புகார்

வாழப்பாடி. அக்.17: வாழப்பாடியில், விவசாய கடன், நகை கடன் தொடர்பாக கிளை மேலாளர் மீது போலீசில் பரபரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன்(51). விவசாயியான இவர், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் சிங்கிபுரம் கிளையில் கடந்த 9.4.18ம் தேதி 11 சவரன்(91.20 கிராம்) நகையை அடகு வைத்து ₹1.49 லட்சம் விவசாய கடன் வாங்கியுள்ளார். அதே வங்கி கிளையில் மற்றொரு கணக்கு மூலமாக 13.11.16ம் தேதியில் ₹50 ஆயிரம் கடன் வாங்கி, திருப்பி செலுத்தாததால் வராக்கடனாக இருப்பதாக கூறி, அடமான நகையை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி 10 மாதத்திலேயே ஏலம் விட்டுள்ளனர். ஆனால், அதற்கான தொகையை வரவு வைக்கப்படவில்லை என தெரிகிறது. இந்நிலையில், லோகநாதனுக்கு வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது. அதில், ₹47,501 கட்ட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக வங்கி கிளைக்கு சென்று கேட்டபோது, ₹56000 செலுத்த வேண்டும் என மேலாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி ₹30 ஆயிரம், ஜூலை மாதம் 17ம் தேதி ₹26 ஆயிரம் செலுத்தியதாக லோகநாதன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, கூடுதல் தொகையை அவரிடமே திருப்பி ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேவேளையில், வங்கியில் நகை அடகு வைத்த 10வது மாதத்திலேயே வராக்கடன் நிலுவையில் இருப்பதாக கூறி ஏலம் விடப்பட்டது தொடர்பாக வாழப்பாடி போலீசில் லோகநாதன் புகார் தெரிவித்துள்ளார். அதில், பயிர் கடனுக்காக தனது நகைகளை 10 மாதத்தில் ஏலம் விட்டு விட்டதாகவும், அந்த தொகையில் நகை கடனுக்காக மட்டும் வரவு வைத்துக்கொண்டு, பயிர் கடனுக்கு வரவு வைக்காமல் வக்கீல் நோட்டீஸ் விட்டதால் ₹56,000 கட்டிய நிலையில், இதுநாள் வரை வரவு வைக்காத வங்கி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : bank manager ,
× RELATED பொதுமக்களுக்கு இடையூறாக கல்வெட்டு அமைக்கும் பணி: கலெக்டரிடம் புகார்