×

மாநகராட்சி 40வது வார்டில் 10 பேருக்கு மர்ம காய்ச்சல்

சேலம், அக். 17:சேலம் மாநகராட்சி 40வது வார்டில் சுகாதார சீர்கேட்டால் 10 ேபருக்கு மர்மகாய்ச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அம்மாபேட்டை 40வது வார்டு கிருஷ்ணா நகர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குப்பைகள், கழிவுகள் தேங்கி நிற்கிறது.  மேலும் சாலையில் கொட்டப்படும் குப்பைகளும் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் கிருஷ்ணா நகர் பகுதியில் கொசுகள் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் மர்மகாய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘அம்மாபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட 40வது வார்டு கிருஷ்ணா நகர் பகுதியில் நீண்டநாட்களாக குப்பைகள், கழிவுகள் அகற்றப்படாமல் கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி உள்ளது. டெங்கு காய்ச்சல் பாதிப்புகளும் அதிகரித்துள்ளது. எனவே கொசு மருந்து அடித்தும், குப்பைகளை அகற்றியும் உரிய பாதிப்புகளை தவிர்க்க நடவடிக்ைக எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : corporation ,Ward ,
× RELATED மாநகராட்சி மேயர், கமிஷனர் வரிசையில் நின்று வாக்களிப்பு