×

5 ஆண்டாக பூட்டி கிடக்கும் கிராம சேவை மைய கட்டிடம்

பாப்பிரெட்டிப்பட்டி, அக்.17: பாப்பிரெட்டிப்பட்டி அருகே கட்டி முடித்து பூட்டிக்கிடக்கும் கிராம இ.சேவை மையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி அருகே புதநத்தம் ஊராட்சியில் சுமார் 600 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களின் தேவைகளின் ஒன்றாக சிட்டா அடங்கல் வருமானம், இருப்பிட மற்றும் ஜாதி சான்றிதழ் தேவைப்படுகிறது. இதற்காக தமிழக அரசு ஒவ்வொரு ஊராட்சியிலும் ஊரக மற்றும் ஊராட்சி நிதியின் இ.சேவை மையங்களை கட்டி தரப்பட்டு வருகிறது. இதில் புதநத்தம் ஊராட்சியில் ₹7 லட்சம் மதிப்பில் மக்களின் தேவையை கருத்தில் கொண்டு கிராம இ.சேவை மையம் கட்டிகொடுக்கப்பட்டது. ஆனால் மக்களின் ேதவைக்காக கட்டி கொடுக்கப்பட்ட இந்த சேவை மையம் கடந்த 5 ஆண்டாக திறக்காமல் பூட்டி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் அலுவலகம் சென்று சான்றிதழ்கள் பெற வேண்டி உள்ளது. இதனால் அதிக தூரம் செல்ல வேண்டி உள்ளதால் பொதுமக்கள் அவக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி பூட்டி கிடக்கும் சேவை மையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : building ,Village Service Center ,
× RELATED கொல்கத்தாவில் 5 மாடி கட்டிடம் இடிந்து 9 பேர் பலி