×

நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கொசு மருந்து அடிக்கும் இயந்திரங்கள் சோதனை

நல்லம்பள்ளி, அக்.17: நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கொசு மருந்து அடிக்கும் இயந்திரங்கள் பரிசோதனை செய்யப்பட்டது. தர்மபுரி அடுத்த நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், டெங்கு கொசுக்களை ஒழிப்பதற்காக 2 எஞ்சின் பொருத்திய ஹை பவர் மிஷின் பரிசோதிக்கப்பட்டது. தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளது. இதனால் கிராமம் மற்றும் நகர் பகுதிகளில் குளம், குட்டை போன்ற இடங்களில் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் செடி கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் கொசுக்கள் அதிகமாக பரவி டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க மாவட்ட கலெக்டர் மலர்விழி உத்தரவின் பேரில், ஒவ்வொரு தாலுகாவிலும்  சிறிய இயந்திரமும் ஒரு யூனியனுக்கு 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 எஞ்சின் பொருத்திய உயரழுத்த மிஷன் வழங்கப்பட்டுள்ளது.இந்த இயந்திரங்கள் நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சோதனை செய்யப்பட்டது. இதில் நல்ல நிலையில் உள்ள இந்த இயந்திரங்களால் கொசு ஒழிப்பு பணிகள் காலை மற்றும் மாலையில் மேற்கொள்ளப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழிதேவன் கூறினார்.ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்( கிராம ஊராட்சி ) கிருஷ்ணன், உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிசங்கர், ஊராட்சி மன்ற செயலர் செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Inspection ,Nallampalli Regional Development Office ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் ஆய்வு அரசு...