×

வளர்ச்சி திட்ட பணிகள் அறிக்கை ஒப்புதல் குமரி மாவட்ட ஊராட்சிளில் சிறப்பு கிராம சபாக் கூட்டம்

நாகர்கோவில்: குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்ட அறிக்கை 2020-2021ம் ஆண்டிற்கு ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் கீழ் மேற்கொண்ட பணிகள் மற்றும் பிற துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் தயார் செய்யப்பட்ட திட்ட அறிக்கை கிராம சபாவில் ஒப்புதல் பெற வேண்டியுள்ளதால் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது. அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் அக்டோபர் 22ம் தேதி மகாராஜபுரம், 29ம் தேதி இரவிபுதூர், நவம்பர் 5ம் தேதி பஞ்சலிங்கபுரம், 12ம் தேதி குலசேகரபுரம், 19ம் தேதி சுவாமிதோப்பு, 26ம் தேதி நல்லூர், 29ம் தேதி ராமபுரம், டிசம்பர் 3ம் தேதி வடக்குதாமரைக்குளம், 6ம் தேதி லீபுரம், 10ம் தேதி கரும்பாட்டூர், 13ம் தேதி கோவளம், 17ம் தேதி தேரேகால்புதூர் ஊராட்சிகளில் நடக்கிறது.

தோவாளை ஒன்றியத்தில் அக்டோபர் 22ம் தேதி தெரிசனங்கோப்பு, 25ம் தேதி தெள்ளாந்தி, 29ம் தேதி பீமநகரி, 31ம் தேதி கடுக்கரை, நவம்பர் 5ல் திடல், 8ம் தேதி காட்டுபுதூர், 12ம் தேதி அருமநல்லூர், 19ம் தேதி திருப்பதிசாரம், 22ல் ஞாலம், 26ல் ஈசாந்திமங்கலம், 29ல் மாதவாலயம், டிசம்பர் 3ல் செண்பகராமன்புதூர், 6ல் இறச்சகுளம், 10ல் தடிக்காரன்கோணம், 13ல் தோவாளை, 17ல் சகாயநகர் ஊராட்சிகளில் நடக்கிறது. ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் அக்டோபர் 22ம் தேதி மேலகிருஷ்ணன்புதூர், 29ல் ஆத்திக்காட்டுவிளை, நவம்பர் 5ல் எள்ளுவிளை, 12ல் பறக்கை, 19ல் கேசவன்புத்தன்துறை, 26ல் பள்ளம்துறை, நவம்பர் 29ல் மேலசங்கரன்குழி, டிசம்பர் 3ல் புத்தேரி, 6ல் ராஜாக்கமங்கலம், 10ல் மணக்குடி, 13ல் தர்மபுரம், 17ல் கணியாகுளம் ஊராட்சிகளில் நடக்கிறது. குருந்தன்கோடு ஒன்றியத்தில் அக்டோபர் 22ம் தேதி தென்கரை, 29ல் நெட்டாங்கோடு, நவம்பர் 5ல் கக்கோட்டுதலை, 12ல் தலக்குளம், 19ல் குருந்தன்கோடு, 26ல் கட்டிமாங்கோடு, டிசம்பர் 3ல் சைமன்காலனி, 10ல் வெள்ளிச்சந்தை, 17ல் முட்டம் ஊராட்சிகளில் நடக்கிறது. தக்கலை ஒன்றியத்தில் அக்டோபர் 22ல் சடையமங்கலம், 29ல் முத்தலக்குறிச்சி, நவம்பர் 5ல் மருதூர்குறிச்சி, 12ல் கல்குறிச்சி, 19ல் ஆத்திவிளை, 26ல் திக்கணங்கோடு, டிசம்பர் 3ல் நுள்ளிவிளை ஊராட்சிகளில் நடக்கிறது.

திருவட்டார் ஒன்றியத்தில் அக்டோபர் 22ல் பாலமோர், 29ல் சுருளகோடு, நவம்பர் 5ல் ஏற்றக்கோடு, 12ல் அருவிக்கரை, 19ல் குமரன்குடி 26ல் கண்ணனூர், டிசம்பர் 3ல் பேச்சிப்பாறை, 6ல் காட்டாத்துறை, 10ல் அயக்கோடு, 17ல் செறுகோல் ஊராட்சிகளில் நடக்கிறது. கிள்ளியூர் ஒன்றியத்தில் அக்டோபர் 22ல் திப்பிறமலை, 29ல் முள்ளாங்கினாவிளை, நவம்பர் 5ல் கொல்லஞ்சி, 12ல் மத்திகோடு, 19ல் பாலூர், 26ல் நட்டாலம், டிசம்பர் 3ல் மிடாலம், 10ல் இனையம்புத்தன்துறை ஊராட்சிகளில் நடக்கிறது. முஞ்சிறை ஒன்றியத்தில் அக்டோபர் 22ம் தேதி முஞ்சிறை, 29ம் தேதி மங்காடு, நவம்பர் 5ம் தேதி சூழால், 12ல் குளப்புறம், 19ல் வாவறை, 26ல் நடைக்காவு, டிசம்பர் 3ல் அடைக்காகுழி, 6ல் விளாத்துறை, 10ல் தூத்தூர், 13ல் பைங்குளம், 17ல் மெதுகும்மல் ஊராட்சிகளில் நடக்கிறது.

மேல்புறம் ஒன்றியத்தில் அக்டோபர் 22ம் தேதி வன்னியூர், 29ல் புலியூர்சாலை, நவம்பர் 5ல் மாங்கோடு, 12ல் விளவங்கோடு, 19ல் மஞ்சாலுமூடு, 26ல் மலையடி, டிசம்பர் 3ல் முழுக்கோடு, 6ல் வெள்ளாங்கோடு, 10ல் மருதங்கோடு, 17ல் தேவிகோடு ஊராட்சிகளில் நடக்கிறது.தனி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) மூலம் நியமனம் செய்யும் பற்றாளர்கள் மற்றும் தொடர்புடைய அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று சிறப்பாக நடத்தவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சிப் பகுதிகளுக்குட்பட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கொரோனா அச்சுறுத்தல் கலெக்டர் அலுவலகத்தில் கை கழுவ தனி அறை