×

தொடர் மழை கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து பாதிப்பு

கன்னியாகுமரி: சர்வதேச  சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல பகுதிகள் மற்றும்  வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வருகை  தருகின்றனர். சூரியன் உதயம், அஸ்தமனம் ஆகியவற்றை பார்த்து ரசிக்கிறார்கள். கடலில் நீராடி பகவதியம்மன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்கின்றனர்.   கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, கடற்கரையோரமுள்ள  காந்தி, காமராஜர் மண்டபங்கள், அரசு அருங்காட்சியகம் போன்றவற்றை பார்வையிட்டு மகிழ்கிறார்கள். இதனால் காலை மற்றும் மாலை வேளைகளில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால்  கன்னியாகுமரி களைகட்டும்.

இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அவ்வப்போது சாரல் மழையோடு சில  நேரங்களில் கன மழையும் வெளுத்து வாங்குகிறது. இதனால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா  பயணிகளின் வருகை மிகவும் குறைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவும் கனமழை  பெய்தது. நேற்று காலையில் மழை இல்லை. இதனால் வழக்கம் போல் காலை 8.30 மணியளவில் படகு  போக்குவரத்து தொடங்கியது. ஆனால் திடீரென 10.15 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது. மேலும் கடல் நீர்மட்டமும் குறைந்தது. இதைத்தொடர்ந்து படகு  போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா  பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.  இந்நிலையில் சற்று நேரத்தில் மழை குறைந்தது. கடல் நீர்மட்டமும் சீரானதையடுத்து பகல் 11.15 மணியளவில் மீண்டும் படகு சேவை தொடங்கியது.

Tags : Kanyakumari ,
× RELATED கன்னியாகுமரி மக்களவை தேர்தல்-...