×

பசுபதிபாளையம் அமராவதி ஆற்றை சுற்றி படர்ந்துள்ள கருவேல செடிகள் அகற்றப்படுமா?

கரூர், அக். 17: கரூர் பசுபதிபாளையம் அமராவதி ஆற்றை சுற்றி படர்ந்துள்ள சீமைக்கருவேல செடிகள் அகற்றப்படுமா? என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் நகர்ப்பகுதியின் வழியாக சென்று திருமுக்கூடலு£ரில் அமராவதி ஆறு காவிரியுடன் கலக்கிறது. இதில், நகரப்பகுதிகளின் வழியாக செல்லும் அமராவதி ஆற்றில் அதிகளவு சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்திருந்தன.நிலத்தடி நீர் மட்டத்தை வெகுவாக பாதிக்கும் தன்மை இதற்கு உள்ளதால், கடந்த சில ஆண்டுகளாக, மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு பொதுநல அமைப்புகளின் சார்பில் பொக்லைன் மூலம் செடிகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.அமராவதி ஆற்றின் பெரும்பாலான பகுதிகளில் முட்செடிகள் அகற்றப்பட்டன. தற்போது, திரும்பவும் மழைக்காலம் துவங்கியுள்ளதால் பல்வேறு பகுதிகளில் முட்செடிகள் அதிகளவு வளர்ந்துள்ளது. குறிப்பாக, பசுபதிபாளையம் மேம்பாலம் மற்றும் ரயில்வே பாலத்தின் வழியாக செல்லும் அமராவதி ஆற்றுப்பகுதிகளில் அதிகளவு முட்செடிகள் வளர்ந்துள்ளன. ஒரு சில நாளில் வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ளன. இந்த காலக்கட்டத்தில்தான் அமராவதி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். அந்த சமயங்களில், நீரோட்டம் மற்றும் நிலத்தடி நீர் மட்டத்தை பாதிக்காத வகையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், திரும்பவும் அதிகளவு முட்செடிகள் இந்த பகுதிகளில் வளர்ந்துள்ளன.எனவே, துறை அதிகாரிகள் இந்த பகுதிகளை ஆக்ரமித்து வளர்ந்துள்ள முட்செடிகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : plants ,Amaravati River ,
× RELATED குந்தா அணையில் நீர் திறப்பு நிறுத்தம்:...