×

மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

கரூர், அக்.17: கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ரிசர்வ் வங்கியில் இருந்து எடுத்த 1லட்சத்து 76ஆயிரம்கோடி ரூபாயை பொதுமுதலீட்டுத் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பினை அதிகரிக்க வேண்டும். வேலையில்லா இளைஞர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.18ஆயிரம்உத்தரவாதம் செய்ய வேண்டும் என்பதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரி கட்சிகளின் சார்பில் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ரத்தினம் தலைமை வகித்தார். மார்க்சிய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் கந்தசாமி உள்ளிட்டோர் பேசினர்.


Tags : parties ,government ,
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...