×

போக்குவரத்து விதி மீறிய 42 பேர் மீது வழக்குப்பதிவு

உளுந்தூர்பேட்டை,  அக். 17: உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி விஜயக்குமார் உத்தரவின் பேரில்  உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், எலவனாசூர்கோட்டை, எடைக்கல்  காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில்   ஈடுபட்டனர்.
அப்போது குடிபோதையிலும், லைசென்ஸ் இல்லாமலும், உரிய ஆவணங்கள்  இன்றியும் இருசக்கர மற்றும் கனரக வாகனங்களை ஓட்டிச் சென்ற 42 வாகன  ஓட்டிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து போக்குவரத்து  விதிமுறைகளை மீறிய
3 பேரின் லைசென்சுகளை ரத்து செய்ய மோட்டார் வாகன  அலுவலகத்திற்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.


Tags :
× RELATED தங்கம் விலை மேலும் மேலும் அதிகரிப்பு: 42 ஆயிரத்தை நெருங்கியது சவரன்