×

கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர், அக். 17:    மோடி அரசின் நடவடிக்கைகளை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் கடலூரில் நேற்று நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(எம்எல்) லிபரேஷன் ஆகிய கட்சிகள் ஒருங்கிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின.ரிசர்வ் வங்கியில் இருந்து எடுக்கப்பட்ட ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடியை பொது முதலீட்டு திட்டங்களுக்கு பயன்படுத்தி வேலை வாய்ப்பினை அதிகரிக்க வேண்டும். வேலையில்லா இளைஞர்களுக்கு வேலையில்லா கால நிவாரணமும், வேலையிழந்துள்ள தொழிலாளர்களுக்கு மாதாந்திர வாழ்க்கை ஊதியமும் வழங்க வேண்டும்.தொழிலாளிக்கு குறைந்த பட்ச மாத ஊதியம் ரூ.18 ஆயிரம் என உத்தரவாதம் செய்ய வேண்டும். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் வேலை நாட்களை 200 ஆக அதிகரித்திட வேண்டும். விவசாய நெருக்கடியில் தவித்து வரும் விவசாயிகளுக்கு ஒருமுறை கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகள் அமர்நாத், தமிழ்மணி, ராஜசங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். சுகுமாறன், மணிவாசகம், தனவேல், ஆறுமுகம், துரை, சிகாமணி, மருதவாணன், குளோப், புகழேந்தி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரை
நிகழ்த்தினர்.

Tags : parties ,
× RELATED ஊடகங்களை மிரட்டுபவர்கள் மீது...