×

அச்சகத்தார் சங்க கூட்டம்

சிதம்பரம், அக். 17:  சிதம்பரம் அச்சகத்தார் சங்க கூட்டம் மேலவீதியில் நடந்தது. சங்கத்தலைவர் மணிபாரதி மணிவண்ணன் தலைமை வகித்தார். செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் அதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மீண்டும் தலைவராக மணிபாரதி மணிவண்ணன் தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக ரமேஷ், செயலாளராக செந்தில்குமார், இணைச்செயலாளராக முத்துக்குமார், பொருளாளராக கல்யாணசுந்தரம், செயற்குழு உறுப்பினர்களாக உபேஷ்குமார், பாக்கியராஜ் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் முன்னாள் நிர்வாகிகள் மூர்த்தி, சங்கர் ஆகியோரின் கடந்த கால பணிகளை
பாராட்டினர்.

Tags : meeting ,Press Association ,
× RELATED அனைத்து கட்சி கூட்டம்