×

ஊத்துக்கோட்டை அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வினியோகம்

ஊத்துக்கோட்டை, அக்.17:  ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில், ‘செந்தில்குமார் கல்வி அறக்கட்டளை’ சார்பில்,  டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றன.  இதில், அறக்கட்டளை தலைவர்  ஜெயலட்சுமி மணிமனோகரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கோல்டுமணி, தில்லை குமார் ஆகியோர் வரவேற்றனர். பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் கோ.சீனிவாசன்,  முன்னாள் வக்கீல்கள் சங்க தலைவர் வேல்முருகன், சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன்  மாணவ - மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி நோய் தடுப்பு குறித்து சிறப்புரையாற்றினார்.


Tags : Government schools ,
× RELATED மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் விநியோகம்