ஊத்துக்கோட்டை பாஜ சார்பில் சமூக விழிப்புணர்வு பாத யாத்திரை

ஊத்துக்கோட்டை,  அக். 17:  ஊத்துக்கோட்டை பாஜ  சார்பில், காந்தி ஜெயந்தியையொட்டி  சமூக விழிப்புணர்வு பாத யாத்திரை நடந்தது.ஊத்துக்கோட்டையில் தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின், 150வது ஜெயந்தி விழாவையொட்டி  பாரதிய ஜனதா கட்சி சார்பில், சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை நேற்று நடைபெற்றது.  இதில், மண்டல தலைவர் தயாளன் தலைமை தாங்கினார்.  மாவட்ட துணைத்தலைவர் மூர்த்தி, மண்டல பொதுச்செயலாளர் கேசவன், பொருளாளர் லட்சுமணநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊத்துக்கோட்டை திருவள்ளூர் சாலையில் இருந்து பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி மாணவ - மாணவிகளின் பாதயாத்திரை  அண்ணாசிலை, நேரு பஜார், நேரு சாலை வழியாக  பேரூராட்சி அலுவலகத்தை  அடைந்தனர்.

பின்னர், அங்குள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக, பாதயாத்திரையில்  மாணவ - மாணவிகள்   மதுவை தவிர்க்க வேண்டும், சமூக ஒற்றுமை மேம்படுத்த வேண்டும், பிளாஸ்டிக் தவிர்க்க வேண்டும் என பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய படி சென்றனர். நிகழ்ச்சியில்  பாஜ  கட்சி மாவட்ட தலைவர் எம்.பாஸ்கரன், பொற்றோர் - ஆசிரியர் கழக தலைவர்  கோ.சீனிவாசன், பள்ளியின் தாளாளர் ரங்கநாதன்,  முன்னாள் கவுன்சிலர்  அண்ணாதுரை உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>