×

மாவட்ட அளவிலான பெண்கள் மைய பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

காஞ்சிபுரம், அக்.17: மாவட்ட அளவிலான பெண்கள் மைய பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.மஹிலா சக்தி கேந்திரா எனும் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கப்பட உள்ள மாவட்ட அளவிலான பெண்கள் மையத்தில், தொகுப்பூதிய அடிப்படையில் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்யப்பட உள்ளன.எனவே, அந்த காலிப்பணி இடங்களுக்கென குறிப்பிட்டுள்ள கல்வி மற்றும் இதர தகுதிகள் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலி பணியிடங்கள் குறித்த விவரம் மற்றும் விண்ணப்பபடிவத்தினை https://kancheepuram.nic.in இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை மாவட்ட சமூகநல அலுவலகம், எண்-43, 2வது தெரு, காந்திநகர், செவிலிமேடு, காஞ்சிபுரம் -631501 என்ற முகவரியில் அடுத்த மாதம் 8ம் தேதிமாலை 5.45 மணிக்குள் சமர்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED பெண்களுக்கு சொத்துரிமை ஜி.கே.வாசன் வரவேற்பு