×

அரசு மருத்துவமனையில் திமுக எம்எல்ஏ திடீர் ஆய்வு


காஞ்சிபுரம், அக்.17: காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில், காஞ்சிபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.மகப்பேறு பிரிவு, குழந்தைகள் பிரிவு, தீக்காய பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, புற நோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு, மருந்து வழங்கும் இடம் ஆகிய பிரிவுகளுக்கு நேரடியாக சென்று என்ன வசதிகள் இருக்கின்றன, என்னென்ன வசதிகள் குறைவாக உள்ளன என மருத்துவர்களிடம் கேட்டு அறிந்தார்.மேலும் சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக போதுமான கட்டிடங்கள் இருக்கிறதா, நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவதற்கு போதுமான படுக்கை வசதி இருக்கிறதா என ஆய்வு செய்தார். பின்னர், காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டதா, டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சேர்க்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் நோயாளிகளிடமும் சிகிச்சைகள் முறையாக அளிக்கப்படுகிறதா, மருந்து மாத்திரைகள் ஒழுங்காக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார். தொடர்ந்து, மருத்துவமனையில் எம்எல்ஏ மேம்பாட்டு நிதியில் கட்டப்படும் புதிய எம்ஆர்ஐ ஸ்கேன் மைய கட்டிட பணிகளையும் பார்வையிட்டார். பின்னர் மருத்துவர்களுக்கு உரிய ஆலோசனைகளையும் வழங்கினார்.இந்த ஆய்வின்போது, காஞ்சிபுரம் நிலைய மருத்துவர் பாஸ்கரன், காமேஸ்வரன், நகர திமுக செயலாளர் சன் பிராண்ட் ஆறுமுகம், தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், நிர்வாகிகள் அபுசாலி, மாமல்லன், சந்துரு, எல்லப்பன் உள்பட பலர் இருந்தனர்.

Tags : DMK ,Government Hospital ,
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்