×

கல்வி மாவட்ட அலவிலான அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி

காஞ்சிபுரம், அக்.17: காஞ்சிபுரம் கல்வி மாவட்ட அளவிலான அறிவியல், கணிதம் மற்றும் சுற்றுச்சூழல் கண்காட்சி காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று முன்தினம் நடந்தது.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி தலைமை தாங்கி கண்காட்சியை தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலர் மகேஸ்வரி வரவேற்றார். காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தில் உள்ள 220 நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட அறிவியல், கணிதம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான படைப்புகள் கண்காட்சியில் வைக்கப்பட்டன.

போக்குவரத்து விதிமுறைகள், மரம் வளர்ப்பதன் அவசியம், நியூட்டனின் விதிகள்  உள்ளிட்ட பொருள்களை மையப்படுத்தி கண்காட்சி அமைக்கப்பட்டிருந்து. சிறந்த படைப்புகளை வைத்த மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி பாராட்டி, சான்றிதழ்களை வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சைமன் திருத்துவராஜ் நன்றி கூறினார்.

Tags : Science Exhibition ,Government Schools ,Education District ,
× RELATED கொரோனா காலத்திலும் அரசுப் பள்ளிகளில்...