×

போடியில் இருந்து கேரளாவிற்கு வேனில் கடத்திய 250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


போடி, அக்.16: போடியிலிருந்து கேரளாவிற்கு கடத்திய 250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார். தப்பியோடிய தம்பதியை தேடி வருகின்றனர்.  போடி முந்தல் சோதனை சாவடியில் உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரளாவிற்கு சென்ற வேன் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது வேனில் இருந்த ஒரு பெண் உட்பட 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். சோதனையில் வேனில் 7 சிப்பங்களில் 250 கிலோ ரேசன் அரிசியை சட்டவிரோதமாக  கொண்டு சென்றது தெரிந்தது. விசாரணையில் தப்பி ஓடியது போடி பங்கஜம் பிரஸ் பின்புறம் தெருவை சேர்ந்த மாரிமுத்து (45), அவரது மனைவி பாண்டியம்மாள் (35) என தெரியவந்தது. வேனை இதே தெருவை சேர்ந்த பாலு (43) என்பவர் ஓட்டிச் சென்றதும் தெரிந்தது.   3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீஸார் ஓட்டுநர் பாலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய மாரிமுத்து, பாண்டியம்மாள் தம்பதியை தேடி வருகின்றனர்.


Tags : Kerala ,
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு