×

வீரபாண்டி முல்லையாற்றில் இந்தோ-திபெத் படையினர் பயிற்சி

தேனி, அக்.16: இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் போர்க்காலங்களில் நதிகளை கடப்பது எப்படி, பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி என்பது குறித்து தேனி அருகே வீரபாண்டி முல்லையாற்றில் ஒரு நாள் முழுக்க பயிற்சி பெற்றனர்.சிவகங்கை மாவட்டம், இலுப்பகுடியில் உள்ள ‛ரெக்ரூட் பயிற்சி மையத்தில்’ இருந்து கமாண்டர் ஜஸ்டின் ரோபர்ட், உதவி கமாண்டர்கள் ரவிபிரகாஷ், மகேந்தர்சிங் தலைமையில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 120 பேர் நேற்று அதிகாலை வீரபாண்டிக்கு வந்தனர். அங்குள்ள முல்லையாற்றுப்படுகையில், போர் பகுதிகளில் அமைப்பது போல் துணிகள், கம்பிகளால் ஆன கழிப்பிட வசதிகளுடன் கூடிய தற்காலிக குடியிருப்புகளை அமைத்தனர். காலை 10 மணிக்கு முல்லை பெரியாற்றில் பயிற்சி எடுக்க தொடங்கினர். தற்போது முல்லை பெரியாற்றில் விநாடிக்கு ஆயிரத்து ஐநுாறு கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதனால் வெள்ளப்பெருக்கு உள்ளது. எனவே இந்த இடத்தை தேர்வு செய்ததாக கூறிய அதிகாரிகள், போர்க்காலங்களில் வெள்ளப்பெருக்கு வரும் ஆறுகள், நதிகளை பாதுகாப்பாக கடப்பது எப்படி என்பதும் எல்லைப்பாதுகாப்பு படையினருக்கு ஒரு பாடமாக உள்ளது. அதேபோல் வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்பதும் ஒரு பாடமாக உள்ளது. இந்த இரண்டு பாடங்களையும் செயல்முறை விளக்கங்களுடன் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.  எனவே இன்று ஒருநாள் முழுக்க இங்கு எல்லைப்பாதுகாப்பு படையினர் தங்கி பயிற்சி பெறுவார்கள்’ என்றனர். இவர்களுக்கு உதவியாக  108 ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பேரூராட்சி மற்றும் உள்ளூர் போலீசார், தீயணைப்பு படையினரும் பாதுகாப்பிற்கு இவர்களுடன் இருந்தனர்.



Tags : Indo ,soldiers ,Tibetan ,Veerabandi Mullaiyar ,
× RELATED ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கிய சிஆர்பிஎஃப் வாகனம்: 4 வீரர்கள் படுகாயம்