×

புதிய கல்வி கொள்கை கண்டித்து மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

போடி, அக்.16: புதிய கல்வி கொள்கைக்கு எதிராக மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.போடி பழைய பஸ்நிலையம் வஉசி திடலில் புதிய கல்வி கொள்கையை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் குஞ்சுமோன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் காளியப்பன் புதிய கல்வி கொள்கைகளை கண்டித்து பேசினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...