×

குடியிருப்பு பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்

வருஷநாடு, அக்.16: வருசநாடு கிராமத்தில் செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். வருசநாடு கிராமத்தில் வாலிப்பாறை-தும்மக்குண்டு மெயின் ரோடு அருகே அரசு டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடை அருகே வருசநாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இந்த கடையில் பார் வசதி இல்லை. எனவே அந்த பகுதியில் சாலை ஓரங்களிலும், மூல வைகை ஆற்றங்கரையிலும் அமர்ந்து குடிமகன்கள் மது அருந்தி வருகின்றனர்.இதனால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வருசநாடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யபொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி இடமாற்றம் செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடமலை மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, தங்கம்மாள்புரம், மூலக்கடை, கண்டமனூர் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் விதமாக அரசு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. பெண்களின் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் காரணமாக அந்த கிராமங்களில் இருந்த டாஸ்மார்க் கடைகள்  வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அதுபோல் வருசநாடு கிராமத்தில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களின் மூலம்தான் டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களோ? என மக்கள் கேட்கின்றனர்.

 எனவே போராட்டங்களில் ஈடுபடுவதற்கு முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருசநாடு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு இடமாற்றம்  செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  மக்கள் கூறுகையில், வருசநாடு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். குடிமகன்கள் தொல்லையால் அப்பகுதியில் மாணவிகள், பெண்கள் நடமாட முடியவில்லை. எனவே டாஸ்மாக் கடையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டர் உத்தரவிட்டும் டாஸ்மாக் கடையை அகற்றாதது ஏன் என தெரியவில்லை. விரைவில் கடையை அகற்ற வேண்டும் என்றனர். முல்லையாற்றில் மாயமானகல்லூரி மாணவர் 5 நாளுக்கு பிறகு சடலமாக கண்டெடுப்பு


Tags : Task shop ,area ,
× RELATED வாட்டி வதைக்கும்...