×

மகள் வீட்டிற்கு வந்த தாய் விபத்தில் பலி

தேவதானப்பட்டி, அக்.16: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி மன்னாடிமங்கலத்தை சேர்ந்த ராமர். இவரது மகளை தேவதானப்பட்டி அருகே உள்ள மேல்மங்கலத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். மேல்மங்கலத்தில் தற்போது கோவில்திருவிழா நடைபெறுகிறது.  ராமர் தனது மனைவி சித்ராவுடன் டூவீலரில் மேல்மங்கலத்திற்கு நேற்று மதியம் வந்துகொண்டிருந்தார். அப்போது வத்தலக்குண்டில் பெரியகுளம் நோக்கி சென்ற டிப்பர் லாரி டூவீலரில் பின்னால் மோதியதில் சித்ரா சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவ இடத்திற்கு வந்த தேவதானப்பட்டி போலீசார் காயமடைந்த ராமரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் விசாரித்து
வருகின்றனர்.

Tags : accident ,
× RELATED சென்னை விருகம்பாக்கத்தில் கொரோனாவால்...