×

காந்திஜெயந்தி விழா ஊர்வலம்

கம்பம், அக்.16: கம்பத்தில் பாஜ சார்பில் காந்தியடிகளின் 150வது பிறந்த நாள் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு தேனி பாராளுமன்ற பொறுப்பாளரும் மாநில செயற்குழு உறுப்பினருமான ராஜபாண்டியன் தலைமை வகித்தார். கம்பம் நகர தலைவர் திருமால், நகர பொது செயலாளர் ஈஸ்வரன், நகர செயலாளர் சசிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் அரசமரத்தில் தொடங்கி கம்பம் நகர முக்கிய வீதிகளான வ.உ.சி திடல், ஜி.ஹெச் வழியாக நெல்லுக்குத்தி புளியமரம், நாட்டுக்கல், தாத்தப்பன் குளம் வழியாக சுப்ரமணிய கோவில் தெரு மெயின் ரோடு வழியாக கம்பம் காந்தி சிலையில் நிறைவடைந்தது. இந்த பழனிச்சாமி, கிருஷ்ணன், ஈஸ்வரன், பெரியசாமி மற்றும் நகர பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags : Gandhijayanti Festival Processional ,
× RELATED களைகட்டிய தற்காலிக பூத்கள்