×

நவராத்திரி கொலு விழா

போடி, அக்.16: போடி அருகே ஏல விவசாயிகள் சங்க கல்லூரியில் மகளிர் மன்றம் சார்பில் நவராத்திரி கொலு விழா கொண்டாடப்பட்டது. முதல் நவரத்திரி கொலு விழாவை கல்லூரி தலைவர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பூஜை நடைபெற்றது. நிறைவு நாளில் கல்லூரி துணைத்தலைவர் கருப்பையா, செயலாளர் ராமநாதன், முதல்வர் ராஜகுமாரன், மகளிர் மைய ஒருங்கிணைப்பாளர் ராமலட்சுமி அனைத்து துறை மாணவியர்களும் கலந்துகொண்டனர்.

Tags : Navratri Kolu Festival ,
× RELATED பென்னிகுக் மணிமண்டபத்துக்கு பூட்டு...