ஓய்வூதியர்கள் மாநில செயற்குழு கூட்டம்

திருப்பூர், ஆக். 16: திருப்பூரில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.  இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். கவுரவ தலைவர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: அனைத்து மாவட்டங்களிலும் கலெக்டர் தலைமையில் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும். ஓய்வூதியர் குறைகேட்பு கூட்டத்தில் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு தனித்தனியாக அவற்றுக்கான இயக்கத்தின் பதில்களை பதிவு செய்ய வேண்டும். மாவட்ட அளவில் உள்ள ஓய்வூதியர்கள் தொடர்பான நிலுவை நடவடிக்கைகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் மாவட்ட கலெக்டர் தலைமையில் மாதந்தோறும் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் நடத்தி கோரிக்கைகளை விரைந்து முடிக்க வேண்டும் உட்பட 7 தீர்மானங்களை நிறைவேற்றினர். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ரவி மாநில பொருளாளர் மகாலிங்கம் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். மாநில துணைத் தலைவர் நடராஜன் நன்றி கூறினார்.

Related Stories:

>