×

திருப்பூர் ஏஞ்செல் டுட்டோரியல் கல்லூரியில் இளைஞர் எழுச்சி நாள் விழா

திருப்பூர், அக். 16:திருப்பூர் ராயல் ஏஞ்செல் டுட்டோரியல் கல்லூரியில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவை கல்லூரி தாளாளர் கீதா தங்கராஜன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். முதல்வர் தங்கராஜன் ‘‘முயற்சிக்கலாம்’’ என்ற அமைப்பை துவக்கி வைத்தார்.

இதில் சமுதாயத்தில் இனிவரும் காலங்களில் ஒவ்வொருவரின் பிறந்தநாளுக்கும் ஒரு மரம் நடுதல், பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் இருத்தல், இயலாதோருக்கு உதவுதல், சுற்றுப்புறத்தூய்மை பாதுகாத்தல் போன்ற உறுதிமொழிகளை மாணவர்கள் எடுத்துக்கொண்டனர். ‘முயற்சிக்கலாம்’’
என்ற அமைப்பில் மாணவர்கள் இணைந்து எதிர்கால முன்னேற்றத்தை பற்றி ஆலோசனைகளும், கல்வி சார்ந்த அறிவுரைகளும், வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் தினமும் தெரிவிக்கப்பட உள்ளது. மேலும் கலாம் பற்றிய கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, கவிதை போட்டி ஆகியவை நடத்தப்பட்டது. மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் பொன்ராம் நன்றி கூறினார்.

Tags : Youth Revolt Day Celebration ,Tirupur ,Angel Tutorial College ,
× RELATED திருப்பூர் மண்டல போக்குவரத்து பொது மேலாளர் சஸ்பெண்ட்