×

மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி

தேவகோட்டை, அக். 16:  தேவகோட்டை தாலுகா சதுரங்கக் கழகம் தாணிச்சாவூரணி முத்துராமலிங்கம் சமூக அறக்கட்டளை இணைந்து சிவகங்கை மாவட்டம் சதுரங்கக்கழக ஆதரவுடன் தேவகோட்டை ‘தே பிரித்தோ’ மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடந்தது. பரிசளிப்பு விழா பள்ளித்தாளாளர் வின்சென்ட் அமல்ராஜ் தலைமையில் நடந்தது. சதுரங்கக்கழகத் தலைவர் சற்குணநாதன் வரவேற்றார். தலைமையாசிரியர் ஆரோக்கியசாமி மற்றும் வழக்கறிஞர் ராம்ஜி பேசினர். 9 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் மகரிஜி பள்ளி மாணவன் விக்னேஷ் கண்ணன் முதலிடம் பிடித்தார். தாளாம்பாள் பள்ளி மாணவர் அபினவ், இன்பென்ட் ஜீஸஸ் பள்ளி மாணவர் ஸ்ரீஹரி இரண்டாமிடம், பழனியப்பா மூன்றாமிடம் பிடித்தனர். 11 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவி இந்திரா பிரியதர்ஷினி முதலிடத்தையும், செல்லப்பன் வித்யாமந்திர் பள்ளி மாணவர் நித்தேஷ்ராகவ் இரண்டாமிடத்தையும், அதே பள்ளி மாணவர் ஸ்ரீராம் சுந்தர் மூன்றாமிடத்தையும் பிடித்தனர். 13 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் செட்டிநாடு பள்ளி மாணவி ஸ்டீவ்லின் ஸ்டாலின் முதலிடத்தையும், அதே பள்ளி மாணவர் ஸ்டெல்பெர்டு ஸ்டாலின் இரண்டாமிடத்தையும், ஹோலி ஸ்பிரிட் பள்ளி மாணவர் முத்து சிவனேசன் மூன்றாமிடத்தையும் பிடித்தனர். பொதுப்பிரிவுக்கான போட்டியில் கோட்டையூர் கண்ணன் முதலிடத்தையும், தளக்காவூர் சாத்தப்பன் இரண்டாம் இடத்தையும், இன்பென்ட் பள்ளி மாணவர் மனோஜ் மூன்றாமிடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் கேடயங்கள் வழங்கினர். சதுரங்கக்கழகப் பொருளாளர் சந்திரகுமார் நன்றி கூறினார். தாலுகா சதுரங்கக்கழகச் செயலர் எட்வின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். துணைத்தலைவர் ஜான்கென்னடி தலைமையில் செந்தில்வேலன், வைரவன், முத்துராமசாமி ஆகியோர் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

Tags : chess tournament ,
× RELATED முதன்முறையாக ஆன்லைன் முறையில் நடந்த...