×

ஐயூரணிதச்சன் கண்மாய் பகுதியில் அடிப்படை வசதியின்றி மக்கள் அவதி

காளையார்கோவில், அக். 16:  காளையார்கோவில் அருகே, ஐயூரணி தச்சன் கண்மாய் பகுதியில், போதிய அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். காளையார்கோவில் அருகே, கொல்லங்குடி பஞ்சாயத்திற்குட்பட்ட ஐயூரணி தச்சன் கண்மாய் பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் போதிய அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கடந்த சில மாதங்களாக தெருவிளக்குகள் எரியாததால், தெருக்களில் கும்மிருட்டாக உள்ளது. பல தெருக்களில் தெருவிளக்குகள் இல்லை. இதனால், தற்போது பகுதியில் திருட்டுச்சம்பவம், வழிப்பறி கொள்ளை நடந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் வெளியே வருவதற்கு அச்சப்படுகின்றனர். மேலும், குடிநீர் தட்டுப்பாடும் உள்ளது. சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. இதனால், மழை காலங்களில் தண்ணீர் தேங்குகிறது. இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்கின்றனர் பொதுமக்கள்.  எனவே, ஐயூரணிதச்சன் கண்மாய் பகுதியில், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Iuranidachan ,area ,facilities ,Kannamai ,
× RELATED குஜராத் ராஜ்கோட் பகுதியில் வணிக வளாக...