×

சாலைக்கிராமத்தில் நாளை மின்தடை

இளையான்குடி, அக்.16:  சாலைக்கிராமம் மின் நிலையத்தில் மாதாந்திர பணிகள் காரணமாக, நாளை சாலைக்கிராமம், சமுத்திரம், சாத்தனூர், வண்டல், அளவிடங்கான், விரையாதகண்டன், அய்யம்பட்டி, கோட்டையூர் உட்பட அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது என உதவிப் பொறியாளர் சிவக்குமார் அறிவித்துள்ளார். திருவாடானை, அக்.16:திருவாடானை தாலுகா மாவட்டத்தின் நெல் களஞ்சியம் என அழைக்கப்படுகிறது. அதற்கு காரணம் மாவட்டத்திலேயே அதிக அளவாக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக தொடர் வறட்சி காரணமாக நெல் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டு விட்டது.

இந்த ஆண்டாவது எப்படியாவது பருவமழை பெய்து நெல் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில், இப்பகுதி விவசாயிகள் ஏற்கனவே பெய்த சிறு சிறு மழையை கொண்டு நேரடி நெல் விதைப்பு முடித்துவிட்டு மழைக்காக காத்திருந்தனர்.
பல இடங்களில் விதைத்த நெல் மணிகள் முளைக்க கூட மழை பெய்யவில்லை. இன்னும் சில இடங்களில் முளைத்த பயிர் தண்ணீரின்றி கருகி கொண்டிருந்தது.இந்நிலையில் எதிர்பாராதவிதமாக நேற்று காலை முதல் திருவாடானை தாலுகாவில் நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் ஓரளவு நெல் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் கண்மாய் குளங்களிலும் சிறிய அளவில் தண்ணீர் தேங்கி வருகிறது. இதனால் கவலையில் இருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உரமிடுதல் போன்ற பணிகளில் தீவிரம் காட்ட துவங்கி விட்டனர்.

Tags :
× RELATED பொதிகையில் 15 நிமிட சமஸ்கிருத செய்தி...