×

ஆனந்தமலை முருகன் கோயிலில் இன்று கிருத்திகை விழா

ஊட்டி, அக். 16:  ஊட்டி அருகேயுள்ள அப்புகோடு ஆனந்தமலை முருகன் கோயிலில் கிருத்திகை விழா  16ம் தேதி நடைபெற உள்ளது.  ஊட்டி அருகே கீழ் அப்புகோடு பகுதியில் ஆனந்தமலை முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கிருத்திகை விழா இன்று நடக்கிறது. இதை முன்னிட்டு காலை 10 மணிக்கு சித்தி விநாயகருக்கு அலங்கார பூஜையும், ஆனந்தமலை முருகனுக்கு அபிேஷக பூஜையும், ஏழு ஹெத்தையம்மன், நவ கிரகங்களுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு, காலை 10 மணி முதல் 12 மணி வரை வாசு குழுவினாின் சிறப்பு பஜனை நடக்கிறது. 12 மணியில் இருந்து 1 மணி வரை குருத்துகுளி லட்சுமணன், அத்திக்கல் போஜன் குழுவினரின் ஆன்மிக நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து கலாசார நடனம், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் ராமச்சந்திரன் செய்து வருகிறார்.

Tags : Anandamalai Murugan Temple ,
× RELATED சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் பழம், காய்கறி அழுகும் அபாயம்