வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள் ‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் திருப்பரங்குன்றத்தில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் பல இடங்களில் பள்ளம்

திருப்பரங்குன்றம், அக்.16: திருப்பரங்குன்றத்தில் ரயில்வே மேம்பாலத்தில் பல இடங்களில் பள்ளம் உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி சாலையில் இரண்டு இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள உள்ளது. இதில் இரண்டாவது பாலம் திருப்பரங்குன்றம் நகரத்தார் மண்டபத்தில் துவங்கி ஹார்விபட்டி பஸ் ஸ்டாப் வரை உள்ளது. இந்த பாலத்தில் பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. குறிப்பாக ஒரு சில இடங்களில் பாலத்தில் உள்ள கான்கிரீட் கலவை பெயர்ந்து கற்கள் வெளியே தெரிவதுடன், கான்கிரீட் கம்பிகள் ஆபத்தான முறையில் வெளியே நீட்டிக்கொண்டு உள்ளது. இந்த கம்பிகள் அவ்வப்போது வாகனங்களின் டயர்களை பதம் பார்த்து விடுவதாகவும், மேலும் இந்த பள்ளங்களில் செல்லும் போது டூவீலரில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துகளில் சிக்குவதாக குற்றம்சாட்டுகின்றனர்.இது குறித்து இப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை எனவும் கூறுகின்றனர். பாலம் மேலும் சேதமடையும் முன் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>