×

டெங்கு விழிப்புணர்வு பேரணி

மதுரை, அக். 16: மழை காலம் ஆரம்பமாகியுள்ளதால், கொசுக்களால், டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் பரவ வாய்ப்பு உண்டு. இதனால், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காக சக்கிமங்கலம் அருகே உள்ள அன்னை சத்யா நகரில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது.இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். காய்ச்சல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பான துண்டு பிரசுரம் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மாணவர்கள் வழங்கினர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் செய்திருந்தனர்.Tags :
× RELATED லட்சுமி நாராயணா மருத்துவ கல்லூரி சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி