×

பாரதியார் பல்கலை கோ-கோ பி.எஸ்.ஜி கல்லூரி சாம்பியன்

கோவை,அக்.16:  பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையிலான கோ-கோ போட்டி கோவை கே.ஜி கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது.
இதில் கோவை,ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 40 கல்லூரிகள் பங்கேற்றன. போட்டிகள் நாக் அவுட் மற்றும் லீக் முறையில் நடந்தது.
நாக் அவுட் சுற்றில் வெற்றி பெற்ற பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி, ஈரோடு கலை அறிவியல் கல்லூரி, வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரி,வி.எல்.பி ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லூரி ஆகிய நான்கு அணிகள் லீக் சுற்றில் மோதின.

லீக் சுற்று முடிவில்  அதிக புள்ளிகள் பெற்ற பி.எஸ்.ஜி அணி முதலிடத்தையும், வி.எல்.பி ஜானகியம்மாள் அணி இரண்டாமிடத்தையும், ஈரோடு கலை அறிவியல் கல்லூரி மூன்றாமிடத்தையும், வித்யாசாகர் கல்லூரி நான்காமிடத்தையும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

Tags : Bharathiyar University Co-BSG College ,
× RELATED நிட்டோ ஏடிபி பைனல்ஸ் மெட்வதேவ் சாம்பியன்