×

சதுரங்க போட்டியில் சாதித்த அரசு பள்ளி மாணவர்கள்

மேலூர், அக். 16: மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் மேலூர் அருகே உள்ள அரசு பள்ளி மாணவர்கள் வெற்றிபெற்று சாதனை படைத்தனர்.மதுரை மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் ஜாஸ் பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது. பல்வேறு பள்ளிகளில் இருந்தது ஏராளமான மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 11 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் அ.வல்லாளபட்டி பள்ளி மாணவர்கள் எம்.சந்தோஷ் முதலிடமும், தேவ்நாத் இரண்டாமிடமும் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களை அ.வல்லாளபட்டி பள்ளி தலைமை ஆசிரியர் திரு.கிறிஸ்டோபர் ஜெயசீலன், அ.செட்டியார்பட்டி இடைநிலை ஆசிரியர் மற்றும் பயிற்சியாளர் ஞா.செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.


Tags : Government school students ,
× RELATED அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆன்-லைன்...