கோவை மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கோவை, அக். 16:  கோவை  மாவட்டத்தில் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என மதிமுக கோரிக்கை  விடுத்துள்ளது. கோவை மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் மோகன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில்  வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு கோவை உள்ளிட்ட பல  மாவட்டங்களில் சராசரி அளவைவிட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பருவமழை  தீவிரம் அடைய உள்ளதால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில்  பாதுகாக்க வேண்டியது கடமை. சாக்கடை கால்வாய் அடைப்புகளை சரிசெய்து, தெருக்களில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றி, தொற்று  நோய் பரவாமல் தடுக்க வேண்டும்.

மேம்பாலங்களுக்கு அடியில் தேங்கும் நீரை  உடனுக்குடன் வெளியேற்ற வேண்டும். தொற்று நோய்களுக்கான மருந்துகளை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருப்பு வைக்க வேண்டும். பாதிப்பு பற்றி மக்கள் தகவல் அளிக்கும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும்  கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும். தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய  வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags : Coimbatore District ,
× RELATED கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு 3690 வாக்குச்சாவடி