×

மாநகராட்சி பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும்

கோவை, அக். 16: நடப்பாண்டில் 10-ம் வகுப்பு மற்றும் 11,12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் மாநகராட்சி பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெறுவதை இலக்காக கொண்டு அனைத்து ஆசிரியர்களும் பணியாற்ற வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் வேண்டுகொள் விடுத்துள்ளார். கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் மாநகராட்சி பள்ளி தலைமையாசிரியர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநகராட்சி துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் பேசியதாவது :  கோவை மாநகராட்சிப் பள்ளிகளின் ஆசிரியர்கள், பணியாளர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு தவறாது வரவேண்டும். பள்ளிகளின் மாணவர்களுக்கு சத்துணவு தரமாக வழங்கப்படுவதை கண்காணிக்க வேண்டும்.

பள்ளிகளின் நூலகங்களிலுள்ள புத்தகங்களை நாள்தோறும் மாணவர்கள் படிக்க செய்ய வேண்டும். மேலும் மாணவர்களின் கூடுதல் திறமைகளை வளர்க்க ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். பள்ளிகளின் சுற்றுப்புறம் தூய்மையாக இருக்கவும், மழைக்காலங்களில் பள்ளிகளின் வளாகத்தில் தண்ணீர் தேங்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு பள்ளியை தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும். நடப்பாண்டில் 10-ம் வகுப்பு மற்றும் 11,12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் மாநகராட்சியின் பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சிபெறுவதை இலக்காக கொண்டு அனைத்து ஆசிரியர்களும் பணியாற்ற வேண்டும். இவ்வாறு ஷ்ரவன்குமார் ஜடாவத் பேசினார். இக்கூட்டத்தில் மாநகர கல்வி அலுவலர் பழனி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : schools ,
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...