ஒட்டன்சத்திரம் அருகே பனை விதை நடும் விழா

ஒட்டன்சத்திரம், அக். 16: ஒட்டன்சத்திரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி 10 ஆயிரம் பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது. கொசவபட்டி அக்சயா அகாடமி பள்ளி சார்பில் பெரியகோட்டை அய்யர் குளத்தில் நடந்த இவ்விழாவிற்கு முன்னாள் எம்எல்ஏ காளியப்பன் தலைமை வகித்து பனை விதைகள் நடும் பணியை துவங்கி வைத்தார். இதில் பள்ளி தாளாளர் மலர்விழிச்செல்வி முன்னிலை வகித்து மாணவர்களுக்கு மரங்கள் வளர்ப்பதன் அவசியம் குறித்தும், நடப்பட்ட மரங்களை எவ்வாறு பாதுகாப்பது பற்றியும் விளக்கி கூறினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன், மகேந்திரன், ஊராட்சி செயலர் ராஜேந்திரன் மற்றும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>