×

பவானி அருகே தனியார் பள்ளி மாணவர் மாயம்

பவானி, அக். 16:  பவானி அருகே தனியார் பள்ளி மாணவர் மாயமானார். பவானியை அடுத்த அம்மாபேட்டை காமராஜர் வீதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் ஹரிஹரன் (17). இவர், நெரிஞ்சிப்பேட்டையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை ஹரிஹரன் பள்ளி முடிந்து வீடு திரும்பினார். பின்னர், சீருடையைக் கழற்றி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து ஹரிஹரனின் பெற்றோர் அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் பள்ளியில் மாணவனை ஆசிரியர்கள் கண்டித்ததால் கோபத்தில் வீட்டைவிட்டு வெளியேறினாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

Tags : Private school student magic ,Bhavani ,
× RELATED பவானி ஆற்றில் 800 இடங்களில் தண்ணீர்...