பழநி அருகே அறிவியல் கண்காட்சி

பழநி, அக். 16: பழநி அருகே புஷ்பத்தூர்  வித்யா மந்திர் பள்ளியில் முன்னாள் ஜனாதிபதிஅப்துல்கலாம் பிறந்தநாளை ஆண்டுதோறும் மாணவர்கள் தினமாக கொண்டாடி வருகின்றனர். நேற்று மாணவர்கள் தினத்தையொட்டி பள்ளியின் வளாகத்தில் நடந்த அறிவியல் கண்காட்சிக்கு முதல்வர் வசந்தா தலைமை வகிக்க, கல்வி ஆலோசகர் பிரியங்கா மதி, அறங்காவலர் செல்வநாயகி முன்னிலை வகித்தனர். தேசிய அறிவியல் மன்றத்தின் மாநில செயலாளர் ராமமூர்த்தி கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் அன்றாட அறிவியல், கழிவுப்பொருட்களில் இருந்து அன்றாடம் பயன்படும் பொருட்கள் உருவாக்குதல், சுகாதாரம், வேளாண்- உணவு பாதுகாப்பு, மாற்று ஆற்றல் பாதுகாப்பு ஆகிய தலைப்புகளின் கீழ் மாணவர்கள் பல்வேறு படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். தொடர்ந்து உலக வெப்பமயமாதலை உணர்த்தி, அதனை தவிர்க்கும் வழிவகையான மரக்கன்றுகள் நடுதல் குறித்து எடுத்துரைக்கப்பட்டு, பார்வையாளர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. கண்காட்சிக்கான ஏற்பாடுகளை துணை முதல்வர்கள் ஹேமலதா, விஜயசரஸ்வதி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Related Stories:

>