ஒட்டன்சத்திரம் பகுதியில் இன்று முதல் கோமாரி தடுப்பூசி தேதி வாரியாக ஊர்கள் அறிவிப்பு

ஒட்டன்சத்திரம், அக். 16: ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதிகளில் கோமாரி நோய் தடுப்பூசி 17வது சுற்று முகாம் அக்.14ம் தேதி துவங்கி நவம்பர் 3ம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று அக்.15ம் தேதி நாகணம்பட்டி, இருளக்குடும்பம்பட்டியில் முகாம் நடைபெறுகிறது. தொடர்ந்து நாளை (அக்.16ம் தேதி) நாகணம்பட்டி, பெரியாஞ்செட்டிபட்டி, அக்.17, 18ம் தேதிகளில் சங்குப்பிள்ளைபுதூர், அக்.19ம் தேதி செல்லப்பகவுண்டன்புதூர், குறிஞ்சிநகர், அக்.20ம் தேதி பொன்னகரம், அக். 21ம் தேதி ஆத்தூர், அக். 22ம் தேதி சீத்தப்பட்டி, அக்.23, 24ம் தேதிகளில் பழனிக்கவுண்டன்புதூர், அக்.25ம் தேதி சண்முகவேல்புரம், லட்சுமிபுரம், அக்.26, 27 தேதிகளில் நாயக்கனூர், அக்.28ம் தேதி தும்மிச்சம்பட்டிபுதூர், அக்.29ம் தேதி தும்மிச்சம்பட்டி, மாருதிநகர், கஸ்தூரிநகர், அக்.30ம் தேதி பழநி ரோடு, தெற்கு தோட்டம், அக்.31ம் தேதி வினோபா நகர், விஸ்வநாதநகர், சாஸ்தாநகர், நவ.1ம் தேதி கே.கே.நகர், கருவூலக் காலனி, நவ.2ம் தேதி குளத்துத்தோட்டம், தாராபுரம் ரோடு, நவ.3ம் தேதி காந்திநகர், திடீர்நகர், செக்போஸ்ட் ஆகிய பகுதிகளில் முகாம்கள் நடைபெறும். இதில் கலந்து கொண்டு பொதுமக்கள் தங்கள் கால்நடைகளை கோமாரி நோயிலிருந்து பாதுகாத்து கொள்ள தடுப்பூசிகளை போட்டு கொள்ள வேண்டும் என ஒட்டன்சத்திரம் அரசு கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார்.


Tags : region ,
× RELATED இரண்டு மடங்கு வேகத்தில் உருகி வரும்...