வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள் ‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் அறிவியல் கண்காட்சி வத்தலக்குண்டு டூ மதுரை அரசு பஸ்சில் கூடுதல் கட்டண அறிவிப்பு ஒட்டப்படுமா?

வத்தலக்குண்டு, அக். 16: வத்தலக்குண்டு- மதுரை இடையே இயக்கப்படும் அரசு பஸ்களில் கூடுதல் கட்டண அறிவிப்பை ஒட்ட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வத்தலக்குண்டுவிலிருந்து மதுரை ஆரப்பாளையத்திற்கு பெரும்பாலான அரசு பஸ்களில் ரூ.36 கட்டணம் வசூலிக்கின்றனர். தனியார் பஸ்களில் ரூ.37 கட்டணம் வசூலிக்கின்றனர். அதேநேரம் சில அரசு பஸ்களில் மதுரை ஆரப்பாளையத்திற்கு ரூ.48 கட்டணம் கூடுதலாக வசூலிக்கின்றனர். வெறும் ரூ.100 வைத்து கொண்டு வத்தலக்குண்டுவில் இருந்து மதுரை செல்லும் ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தெரியாமல் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அரசு பஸ்சில் ஏறி விட்டால் அவர் மதுரைக்கு சென்று ஒரு டீ கூட குடிக்க முடியாமல் திரும்பி வர வேண்டிய நிலை இருக்கும். எனவே கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அரசு பஸ்சின் முன்புற கண்ணாடியில் கட்டண விபர அறிவிப்பை ஒட்ட வேண்டும். இவ்வாறு ஒட்டினால் பணம் சரியாக கொண்டு செல்பவர்கள் விசாரித்து பஸ் ஏறுவார்கள்.இதுகுறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில், ‘வத்தலக்குண்டுவில் இருந்து மதுரைக்கு அறிவிப்பு இல்லாமல் அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் கேட்பதால் பல நேரங்களில்கண்டக்டருக்கும், பயணிகளுக்கும் வாய் தகராறு ஏற்படுகிறது. எனவே உடனடியாக கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அரசு பஸ்களில் கட்டண அறிவிப்பை ஒட்ட வேண்டும்’ என்றனர்.

Related Stories:

>