×

முக்கூடல் பகுதியில் பனை விதைகள் விதைப்பு

பாப்பாக்குடி, அக்.16: முக்கூடல் அருகே தாளார்குளத்தில் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் சார்பில் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் பிறந்தநாளையொட்டி பனை விதை நடும் விழா நடைபெற்றது. முக்கூடல் பயிற்சி டிஎஸ்பி கணேஷ் தலைமை வகித்து பனை விதை விதைக்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். தாமிரவருணி பாதுகாப்பு இயக்க கவுரவ தலைவர் பங்குதந்தை ஜோசப்ராஜன் வரவேற்றார். நெல்லை ரோட்டரி சங்க தலைவர் செந்தில்குமார், பரமசிவன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதயநிறைவு தியான பயிற்சியாளர் கணேசன், திரிபுரசுந்தரி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

சுமார் 7 ஆயிரம் பனை விதைகளை முக்கூடல் தாமிரபரணி பாதுகாப்பு இயக்க தன்னார்வலர்களுடன் இணைந்து இடைக்கால் மெரிட் கலை கல்லூரி, பாலை மகாராஜா நகர் ஜோஸ் மெக்தலின் மெட்ரிக் பள்ளி, முக்கூடல் பூவிஜேஷ் மெட்ரிக் பள்ளி, மவுண்ட் கார்மல் வித்யாலயா ஆகிய கல்வி நிறுவனங்களின் என்எஸ்எஸ், ஊர் பொதுமக்கள்  உட்பட 300க்கும் மேற்பட்டவர்கள் பனை விதைகளை விதைத்தனர். ஏற்பாடுகளை முக்கூடல் தாமிரபரணி பாதுகாப்பு இயக்க தலைவர் முத்தரசன் தலைமையில் ஜெயந்த் பீட்டர், ஹென்றி, பரமசிவம், வைகுண்டராஜா, ஜார்ஜ்வினோத் உட்பட நிர்வாகிகள்  செய்திருந்தனர்.

Tags : Sowing ,area ,Triad ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...