×

கடையத்தில் மூடப்படாத பள்ளத்தால் தொடரும் விபத்து அபாயம்

கடையம், அக். 16: கடையத்தில் குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்புக்காகத் தோண்டிய  பள்ளம் மூடப்படாததால் விபத்து அபாயம் தொடர்கிறது.
கடையம்,  முதலியார்பட்டி, பொட்டல்புதூர், மாதாபுரம் , ஆர்வார்குறிச்சி ,  திருமலையப்பபுரம் ஆகிய கிராமங்களின் வழியாக தாமிரபரணி கூட்டு குடிநீர்  ராட்சத குழாய்களின் மூலம் தென்காசி, செங்கோட்டை பகுதிகளுக்கு விநியோகம்  செய்யபட்டு வருகின்றன. இதில் கடையம் மாட்டு சந்தை அருகில் சாலையை ஒட்டி  இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனை சரி செய்யபட்டு பல  மாதங்கள் ஆகின்றன.

ஆனால்பள்ளத்தைமூடாமல்விட்டுசென்றனர்.இதனால்இந்த  பள்ளத்தில் புற்கள் முளைத்து புதர் போல் உள்ளன. இந்த பள்ளம் சாலை ஒட்டி  காணப்படுவதால் வாகன ஓட்டிகள் பீதியில் உள்ளனர். இந்த பகுதி தென்காசி- அம்பை  சாலை என்பதால் அதிகளவில் போக்குவரத்து வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த  பகுதியில் தெரு விளக்குகள் கிடையாது கும்மிருட்டாகவே காணப்படும். இதனால்  இரவு  நேரத்தில் இந்த பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழும்  அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வழியாக ரயில் நிலைத்திற்கு சென்று வரும் மக்கள்  வாகனத்திற்கு வழி விடும் போது இந்த பள்ளத்தில் நிலைய தடுமாறி விழும் சூழல்  உள்ளது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் இந்த பள்ளத்தை போர்கால அடிப்படையில்  மூட வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Tags : accident ,garage ,
× RELATED அமெரிக்கா பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!