×

செங்கோட்டையில் பேரிடர் விழிப்புணர்வு பேரணி

செங்கோட்டை, அக். 16: சர்வதேச பேரிடர் விழிப்புணர்வு நாளான நேற்று செங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் பேரிடர் விழிப்புணர்வு குறித்த பேரணி நடந்தது. பேரணியை  செங்கோட்டை தாசில்தார் ஓசானா பெர்னாண்டஸ் தலைமை வகிதது கொடியசைத்து துவக்கி வைத்தார். மழைக் காலங்களில் பேரிடர் பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாத்திடவும், இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இயற்கையின் சீற்றங்களான புயல், மழை, வெள்ளம், பூகம்பம், சுனாமி, போன்ற பல்வேறு பாதிப்புகளில் இருந்தும், செயற்கையாக ஏற்படும் பேரிடர் பாதிப்புகளில் இருந்தும் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் செங்கோட்டை போலீசார், இந்திய செஞ்சிலுவை சங்கத்தினர் மற்றும் எஸ்எம்எஸ்எஸ்  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள்,  தேசிய மாணவர் படையினர்  கலந்து கொண்டனர்.

Tags : Disaster awareness rally ,Red Fort ,
× RELATED பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளுடன் ஆலோசனை