×

நாங்குநேரி தொகுதி மக்களுக்கு வசந்தகாலம் பிறந்துவிட்டது

களக்காடு,அக்16: நாங்குநேரி தொகுதி மக்களுக்கு வசந்தகாலம் பிறந்துவிட்டது என நாங்குநேரி, களக்காட்டில் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். நாங்குநேரி, களக்காட்டில் நாங்குநேரி சட்டமன்ற  தொகுதி. அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து தமாகா தலைவர் ஜிகே வாசன் பிரசாரம் செய்தார் அப்போது அவர் பேசியதாவது இந்த தேர்தலில் நீங்கள் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு அளிக்கும் வாக்கு உங்கள் வளர்ச்சிக்கு தொகுதி வளர்ச்சிக்கு நீங்கள் அளிக்கும் வாக்காகும். சட்டமன்ற தேர்தல் வர இன்னும் ஒன்றரை ஆண்டு காலங்கள் உள்ளது. அந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்.  காங்கிரஸ் வேட்பாளர் மீண்டும் ஏமாற்ற நினைத்தால் அதற்கு நாங்குநேரி மக்கள் ஏமாற மாட்டார்கள். இந்த ஆட்சியில் நகரம் முதல் குக்கிராமம் வரை அரசின் திட்டங்கள் முழுமையாக கிடைக்கின்றன. முதல்வரின் வெளிநாட்டு பயணம் முழு வெற்றி பெற்றுள்ளது. அதிமுக கொண்டு வரும் திட்டங்களை திமுக கண்மூடித்தனமாக எதிர்க்கின்றனர். மக்களுக்கு நல்வாழ்வு கொடுக்கும் கட்சியாக அதிமுக உள்ளது. மகளிருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

நாங்குநேரி தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றால் மத்திய அரசின் திட்டங்கள் 100 சதவீதம் கிடைக்கும். பாராம்பரியமிக்க காங்கிரஸ் கட்சி இன்று 53 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ெகாண்டு சுருங்கி வருகிறது. இந்த இடைத்தேர்தல் மூலம் நாங்குநேரி தொகுதிக்கு வசந்தகாலம் பிறந்துள்ளது. நாங்குநேரியில் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழிற்சாலைகள் உருவாகிட, கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் மேம்பட, வடக்கு பச்சையாற்றில் கூடுதல் தண்ணீர் பெற்றிட, களக்காட்டில் வாழைக்காய் சந்தை அமைந்திட ரெட்டியார்பட்டி நாராயணன் நடவடிக்கை எடுக்கப்பார். 4 ஆண்டுகளில் நாங்கு நேரி தொகுதிக்கு கிடைக்காத திட்டங்கள் அடுத்த ஓராண்டில் கிடைக்கும். எனவே ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு போடுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் தமிழக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம், முன்னாள் எம்பி அன்வர்ராஜா, மாநில பேச்சாளர் சி.பா.முருகன், தமாகா மாநில துணைத்லைவர் கோவை தங்கம், முன்னாள் எம்பி ராம்பாபு, மாநில செயலாளர்கள் என்டிஎஸ் சார்லஸ், சரவணன், விஜயசீலன், மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், மாவட்ட தலைவர்கள் மத்தி சுத்தமல்லி முருகேசன், கிழக்கு ஜோதி, மேற்கு அய்யாத்துரை, இளைஞர் தமாகா மாநில பொதுச்செயலளர் ஜெகநாதராஜா, நிர்வாகிகள் ரமேஷ் ெசல்வன், கிருஷ்ணகுமார், டிபிஎஸ் சுப்பிரமணியன், சிவக்குமார், கன்னியாகுமரி செல்வம், திருச்சி குணா உள்பட பலர் வந்தனர்.

Tags : Nankuneri ,
× RELATED மணக்காடு, அரியகுளம் பகுதியில்...