×

உறவினர்களுடன் திதி கொடுக்க வந்த வாலிபர் தலையணையில் மூழ்கி சாவு

வி.கே.புரம், அக்.16: பாபநாசத்திற்கு உறவினர்களுடன் திதி கொடுக்க வந்த வாலிபர் தலையணையில் மூழ்கி இறந்தார். நெல்லை மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள தேவிபட்டணத்தை சேர்ந்த சிலர் இரு நாட்களுக்கு முன் திதி கொடுப்பதற்காக வேன்களில் பாபநாசம் வந்தனர். அவர்களுடன் அதே ஊர் மோசஸ் மகன் சுரேஷ்(27) என்பவரும் வந்தார். இங்கு திதி கொடுத்தபின் அனைவரும் அங்கேயே குளித்தனர். இதில் சுரேஷ் மட்டும் தலையணைக்கு வந்து தனியாக குளித்தபோது நீரில் மூழ்கியதாக தெரிகிறது. சுரேஷை காணாமல் திடுக்கிட்டனர். அவரை தேடி பார்த்தும் கிடைக்காததால் அவரது போட்டோவை அப்பகுதியில் கடை வைத்துள்ளவரிடம் கொடுத்து, இவரை பற்றி தெரியவந்தால் எங்களுக்கு தெரிவியுங்கள் என கூறி சென்றனர். இதுகுறித்து விகேபுரம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை சுரேஷ் உடல் தலையணையில் மிதப்பதாக விகேபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்ஐ மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுரேஷ் குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் அம்பை வந்தனர். இறந்த சுரேஷிற்கு இசையரசி என்ற மனைவியும்
2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

திதி கொடுக்க வந்த இடத்தில் வாலிபர் இறந்த சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது. விதிமுறை மீறுவதால் தொடரும் பலிகள்: வெளியூரில் இருந்து குளிக்க வருபவர்கள் தலையணையின் ஆழமான பகுதியில் சிக்கி உயிரிழப்பது வாடிக்கையாகிவிட்டது. இதை தடுக்கும் விதத்தில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வனத்துறையினர் அப்பகுதியில் குளிக்க தடை விதித்ததோடு யாரும் தலையணைக்கு செல்லாதபடி காம்பவுண்ட் சுவருடன் கூடிய கேட் அமைத்து பூட்டியுள்ளனர். ஆனால் வெளியூர்காரர்கள் வேறு வழியாக தலையணைக்கு சென்று விடுகின்றனர். அதுபோல்தான் சுரேசும் சென்று பலியாகியுள்ளார். சுற்றுலா பயணிகள் பார்வையில் படும்படி பெரிய போர்டு வைத்துள்ளனர். அதையும் மீறி இதுபோன் உயிர்பலிகள் நடப்பதாக வனத்துறையினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

Tags : relatives ,
× RELATED குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது...