×

அங்கன்வாடி பணியாளர்களுக்கு காய்கறி தோட்டம் அமைக்கும் பயிற்சி

நீடாமங்கலம்,அக்.16: நீடாமங்கலம் வேளாண்மைஅறிவியல் நிலையத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி பணியாளர்களுக்கு அங்கன்வாடியில் காய்கறி தோட்டம் அமைத்தல் பற்றிய பயிற்சி நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்ரமணியன் தலைமையில் நடந்தது. அங்கன்வாடியில் சாப்பிடும் குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஊட்டச்சத்தான இயற்கையில் விளையும் காய்கறிகளை சாப்பிட வேண்டும் அங்கன்வாடியில் தோட்டம் அமைப்பதினால் குழந்தைகள் சிறுவயதிலேயே விவசாயத்தின் மீது ஆர்வம் வரும்.

காய்கறி பயிர்களுக்கு இயற்க்கை உரங்களான மக்கிய தென்னை நார்கழிவு மற்றும் மண்புழு உரம் முக்கியமானது. 1 முதல் 3 வயதுடைய குழந்தை ஒரு நாளைக்கு 16.7கிராம் புரத சத்து தேவை.புரதம் அதிகம் உள்ள சோயா,மொச்சை, தட்டைப்பயிறு ,கொண்டக்கடலை போன்ற பருப்பு வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பயிற்சியில் உழவியல்துறை பயிற்சி உதவியாளர் கவிதா உள்ளிட்ட 30பேர் கலந்து கொண்டனர்.அங்கன்வாடியில் காய்கறி தோட்டம் அமைப்பதற்கான துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.


Tags : Anganwadi ,
× RELATED மதுராந்தகம் ஒன்றியத்தில் ரூ.36...