×

தென்காசியில் மேற்கூரை இடிந்து மூதாட்டி படுகாயம்

தென்காசி,அக்.16: தென்காசியில் தொடர் மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூதாட்டி படுகாயமடைந்தார். தென்காசியில் நேற்று காலை முதல் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. காலை ஐந்தரை மணிக்கு துவங்கிய மழை இடியும் மின்னலும் அதிகமாக இருந்தது. தொடர் மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழையால் தென்காசி அரசு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகிலுள்ள ஒரு வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்த ஆறுமுகத்தம்மாள்(75) என்ற மூதாட்டி படுகாயமடைந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Tags : Ancestor ,Tenkasi ,
× RELATED தென்காசி மாவட்டம் மைப்பாறை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து