×

பைக் மோதி படுகாயமடைந்த கூலி தொழிலாளி சிகிச்சை பலனின்றி பலி

முத்துப்பேட்டை, அக்.16: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த வடக்கு பள்ளியமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அரசப்பன்(25). கூலித்தொழிலாளி. இவர் உதயமார்த்தாண்டபுரம் கடைதெருவிலிருந்து ஊருக்கு தனது பைக்கில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த பைக் ஒன்று பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட அரசப்பன் பின்பக்க தலையில் பலத்த காயமடைந்தார். உடன் அப்பகுதியினர் அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை தனியார் மருத்துவமனை, பின்னர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த எஸ்எஸ்ஐ ராஜேந்திரன் பைக்கில் மோதி விட்டு தப்பிய அடையாளம் தெரியாத நபரை தேடி வந்தனர். இந்நிலையில் தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரசப்பன் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த முத்துப்பேட்டைஇன்ஸ்பெக்டர் ராஜேஷ் இறந்த அரசப்பன் உடலை பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Wrecker ,
× RELATED கோவையில் திருடுபோன பைக் பார்சலில்...