×

முத்துப்பேட்டையில் வலையில் சிக்கிய 6அடி நீள பாம்புகள் துணிச்சலுடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டு

முத்துப்பேட்டை, அக்.16: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை மருதங்காவெளிதோப்பு, ரஹ்மத் நகர் கருமாரியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகள் அருகருகே உள்ளது. இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. புதியதாக அமைந்துள்ள இந்த குடியிருப்பு பகுதிகள் நடுவே கருவை காடுகளும் உள்ளன. இதனை ஒட்டி ரயில் நிலையம் மற்றும் ரயில் பாதையும் கடந்து செல்கிறது. இந்நிலையில் மருதங்காவெளி தோப்பு பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரின் வீட்டை சுற்றி வேலியில் கட்டப்பட்டு இருந்த வலையில் நேற்று சுமார் 6அடி நீளம் கொண்ட 2 சாரைப்பாம்புகள் சிக்கியது. இதில் இரண்டு பாம்புகளும் ஒன்றோடொன்று பின்னி தப்பிக்க முயன்றது. இதில் பாம்புகள் காயமும் அடைந்து உயிருக்கு போராடியது.

இந்த செய்தி பரவியதும் அங்கு ஏராளமான மக்கள் திரண்டனர்.இதில் வீட்டின் உரிமையாளர் பாம்பை வலைவிரித்து பிடித்து இருந்தாலும் அதனை கொல்ல அவருக்கும், அங்கு கூடியிருந்தவர்களுக்கும் மனமில்லை இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் முத்துப்பேட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் அங்கு வந்த ராஜேஷ், என்ற இளைஞர் இரு பாம்புகளையும் பயமின்றி துணிச்சலுடன் சாதுர்யமாக உயிருடன் பிடித்து சாக்கு பைக்குள் போட்டார். இதனை வேடிக்கை பார;த்த அப்பகுதி மக்கள் துணிச்சலுடன் பாம்பை பிடித்த ராஜேசை பாராட்டினர் இதனையடுத்து அங்கு வந்த வன காவலர் ராமஜெயம் வசம் பாம்புகளை உயிருடன் ஒப்படைத்தனர். பாம்பை உயிருடன் பிடித்து ஒப்படைத்த ,இளைஞர் ராஜேஷ் மற்றும் அப்பகுதி மக்களை முத்துப்பேட்டை வனசரக அலுவலர் தாஹீர்அலி பாராட்டினார்.
மேலும் பாம்புகளை வனத்துறையினர் பத்திரமாக காட்டு பகுதியில் விட்டனர்.

Tags : forest department ,Muthupettai ,
× RELATED கொல்லிமலை காப்புக்காட்டில் சுற்றுலா...